Breaking
Thu. Nov 14th, 2024
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்துகம நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகாத காரணத்தினால் இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஞானசார தேரர் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகியிருக்கவில்லை.
கடந்த 2015ம் அண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி தேர்தல் சட்டங்களை மீறி வெலிப்பனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீகம அந்தாவல ஸ்ரீ மங்களாராமய விஹாரையில் அரசியல் கூட்டம் நடத்தியதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன என்ற கட்சியில் ஞானசார தேரர் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.விஹாரைக்கு அருகாமையில் உள்ள பகுதி ஒன்றில் கூட்டம் நடாத்த பொலிஸாரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு விஹாரையில் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.
கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் இது பற்றி அறிவித்த போது கூட்டத்தை விஹாரையில் நடாத்தாமல் இருக்க இணங்கிய போதிலும், ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் பின்னர் அந்த விஹாரையிலேயே அனுமதியின்றி கூட்டத்தை நடத்தியிருந்தனர்.
இது தொடாபில் அப்போதைய வெலிப்பனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.வழக்குடன் தொடர்புடைய பௌத்த பிக்குகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
27ம் திகதி வழக்கு விசாரணைகளில் ஞானசார தேரர் முன்னிலையாகத் தவறிய காரணத்தினால் மத்துகம நீதவான், பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

By

Related Post