Breaking
Sun. Mar 16th, 2025

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “எழுக தமிழ்” பேரணிக்குக் கண்டனம் தெரிவித்தும் அதில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில், வவுனியா, மாமடு பிரதேசத்தில், இன்று வௌ்ளிக்கிழமை (30) காலை, ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

சிங்கள பௌத்த அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து, “ஒத்துழைப்புக்கான முன்னெடுப்பு” என்ற பெயரில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கில், சிங்கள சமூகத்தைப் பாதுகாப்பது குறித்தும், இதன்போது கவனம் செலுத்தப்படும் என பொதுபல சேனா அறிவித்துள்ளது.

வடக்கில் சிங்களக் குடும்பங்களை குடியமர்த்த கூடாது என்றும் தமிழர்கள் வாழும் இடங்களில் புத்தர் சிலைகள் இருக்க கூடாது எனவும் தெரிவித்தமைக்கு, இவ்வார்ப்பாட்டத்தின் போது கண்டனம் தெரிவிக்கப்படும் என்றும் அவ்வமைப்புக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post