பிக்குகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுக் கடமையை ஞானசார தேரர் நிறைவேற்றியுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் புகழாரம் சூட்டியுள்ளார்.
நேற்று (27) காலை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம அத்தததஸ்ஸி மகாநாயக்க தேரரையும் அவர் சந்தித்திருந்தார்.
இதன் போது கருத்து வெளியிட்டிருந்த அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அத்ததஸ்ஸி தேரர்,
வரலாற்றுக் காலம் தொட்டு நாட்டில் எழுந்த பல்வேறு பிரச்சினைகளின் போது பௌத்த பிக்குகள் முன்வந்து அப்பிரச்சினைகளில் பங்கெடுத்துள்ளார்கள். அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் அவ்வாறான ஒரு வரலாற்றுக் கடமையையே நிறைவேற்றியுள்ளார் என்றும் மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.(tw)