Breaking
Fri. Nov 1st, 2024

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றப் பத்திரிகையினை தாக்கல் செய்யுமாறு இன்ற உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவு கோட்டை நீதவான் திலினி கமகேயினால் பிறப்பிக்கப்பட்டது.அல் – குர்ஆன் அவமதிப்பு மற்றும் நிப்போன் ஹோட்டேலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அத்துமீறி நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார உட்பட பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக இரண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த இரண்டு வழக்குகள் தொடர்பான விசாரணை கொம்பனித் தெருவிலுள்ள கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. முறைப்பாட்டாளர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான மைத்திரி குணரத்ன, சிராஸ் நூர்தீன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இதன்போது பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஆஜராகியிருந்தனர்.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஞானசார தேரர் வெளியிட்ட கருத்தக்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன் ஞானசார தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்யுமாறும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து குறித்த இரண்டு வழக்கு விசாரணைகளை மார்ச் 2ஆம் திகதி வரை நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை, மன்றில் இன்று ஆஜராகாத இந்த வழக்கின் இரண்டு சந்தேகநபர்களுக்கு நீதவான் பிடியணை பிறப்பித்தார்.

Related Post