Breaking
Tue. Dec 24th, 2024
டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவி கிடைக்கும் வரை டிஜிட்டல் என்றால் என்னவென்றே தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மொனராகலை, வெல்லவாய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நமது பிரதேசத்தில் எப்போது மழை பெய்யும், காலநிலை எவ்வாறு இருக்கின்றது என்பதை நம் கைகளில் வைத்திருக்கும் மொபைல் போன்கள் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.

எதிர்காலத்தில் இலங்கையின் அனைத்து பிரதேச செயலக மட்டத்திலும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, அதனூடாக இளைஞர் , யுவதிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தில் பலன்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

By

Related Post