Breaking
Wed. Mar 19th, 2025

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மலியா. இவருக்கு தற்போது 17 வயது ஆகிறது. கல்லூரியில் படித்து வரும் இவர் எச்.பி.ஓ. டி.வி. தொடரில் பணியாற்றுகிறார்.

எச்.பி.ஓ. டி.வியில் ‘கேர்ள்ஸ்’ என்ற தொடர் தயாராகிறது. அதில் அவர் கதை வசனம் மற்றும் டைரக்ஷன் துறையில் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முடிவடைகிறது. அதன் பிறகு டி.வி. அல்லது சினிமா துறையில் நுழைய மலியா முடிவு செய்துள்ளார்.

அதிபர் மகள் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் வெளிநபர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மலியா ‘கேர்ள்ஸ்’ தொடரின் கதாசிரியரும், டைரக்டருமான லீனா டன்ளும் என்பவரின் தீவிர ரசிகை ஆவார். எனவே, அவரிடம் இவர் கதை வசனம் மற்றும் டைரக்‌ஷன் கற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது.

மகள் டி.வி. துறை மற்றும் சினிமா துறையில் பணிபுரிய விரும்புவதை அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார். அவருக்கு விருப்பமான துறையில் பணியாற்றலாம் என தெரிவித்துள்ளார். ஆனால் மிச்செலி ஒபாமாவோ தனது மகள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.

Related Post