துபாய் விமானத்தின் சரக்குப் பகுதியில் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று பிடிபட்டதாக துபாய் நகராட்சி தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெப்பப் பிரதேச காடுகளில் வாழும் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று துபாய் விமானத்தின் சரக்குப் பகுதியில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வகை விஷப்பாம்பு ஆப்பிரிக்க நாடுகள், ஓமன், தென்மேற்கு சவுதி அரேபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் பரவலாக காணப்படும்.
இந்நிலையில், இந்த விஷப் பாம்பு எவ்வாறு துபாய் விமானத்தில் புகுந்தது என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
சுமார் 6 கிலோ எடைவரையும், 40 செ.மீ முதல் 80 செ.மீ உயரம் வரை வளரக்கூடிய இவ்வகை பாம்பு, ஆப்பிரிக்காவில் ஆண்டுதோறும் பல உயிர்களின் இறப்புக்கு காரணமாக அமையும் என்று கூறப்படுகிறது.