எம்.எம்.எம். ரம்ஸீன்
கம்பளையில் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் முஸ்லிம் குடும்பப் பெண்னொருவர் நேற்று 07.10.2014 உயிரிழந்துள்ளார்.
உடுநுவர வட்டதெனியவை சேர்ந்த இவர் கம்பளை ஆண்டியாகடவத்தை பகுதியில் திருமணம் முடித்து வசித்து வந்துள்ளார்.
கம்பளை போதனா வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட பாத்திமா நஸ்லூன் என்ற (22 வயது) இப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை கம்பளை பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை பெய்த நிலையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்திருப்பதாக சுகாதரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கம்பளை அத்காலை பகுதியில் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயொருவரும் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.