Breaking
Thu. Dec 26th, 2024
 நாட்டில் வேகமாக பரவும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மேல்மாகாண பாதுகாப்புத் தலைமையவினால் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கமைய கொழும்பு- மாத்தறை- இரத்தினபுரி- கேகாலை- குருணாகலை- மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன.
மேல்மாகாண பாதுகாப்புப்படை தலைமையகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட படையினர் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன.
மேல்மாகாண பாதுகாப்புப்படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் யு.ஏ.பீ மெதவலவின் கண்காணிப்பில் மார்ச் 26 முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post