Breaking
Tue. Dec 24th, 2024

ஷப்ரான் முஹம்மட்

வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை பகுதிகளில் கடந்த 22.12.2014ம் திகதி தொடக்கம் 18 நாட்களாக சிறுவர்கள் உட்டபட முதியோர் வரை 23 பேர் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்தேர்ச்சியாக வாழைச்சேனை மற்றும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

இது தொடர்பாக வாழைச்சேனை பொது வைத்திய அதிகாரி அலுவலகமும், மட்டக்களப்பு சுகாதார டெங்கு தடுப்புப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் வகையிலும், டெங்கு தடுப்பு தொடர்பான அனைத்து செயற்பாடுகளின் (அறிவுறுத்தல்கள், குடம்பி சேகரிப்பு) பின்னர் நேற்று (10) காலை வாழைச்சேனை கோழிக்கடை வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகள், பிறைந்துறைச்சேனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் புகை அடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏலவே கடந்த சில நாட்களாக பள்ளிவாயல்களில் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் விடுக்கப்பட்ட அறிவத்திலின் படி டெங்கு பரவுதலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார உத்தியோகத்தரால் தொடர்ந்தேர்ச்சியான அறிவுரைகள் வழங்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு நேற்று, பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அனைவரும் கூட்டாக வீடு வீடுகளுக்குச் சென்று டெங்கு மென்மேலும் பரவுகையைத் தடுக்க ஏதுவான இடங்களை அடையாளப்படுத்தி உரியவர்களிடம் அது தொடர் பான விளக்கங்களை அளித்ததுடன், நீர் தேங்கி நிற்கும் இடங்கள், குப்பை கூலங்கள், யோகட் கோப்பைகள், சிரட்டைகள், சில வகைப் பூச்செடிகள், பாவனைக்குதவாத போத்தல்கள், மற்றும் நுளம்புகள் உருவாகக் கூடிய அனைத்து பகுதிகளையும் அடையாளம் கண்டு உடன் அகற்றுவதற்கு ஆலோசனைகளும் நடவடிக்கைகளும் எடுத்ததோடு தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தல்களையும் வழங்கினர்.

குப்பை கூலங்கள் உடனடியான பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரங்கள மூலம் ஏற்றப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே சகல பொது மக்களும் மேற்படி விடயங்களை முழுக் கவனத்திற் கொண்டு தங்களது வீடு, காணிகளை தினந்தோரும் சுத்தப்படுத்துமாறும் குப்பை கூலங்கள், யோகட் கோப்பைகள், குறும்பைக் கோதுகள், சிரட்டைகள், பாவனைக்குதவாத போத்தல்கள் போன்றவற்றை காணிகளிலோ அல்லது வீதிகளிலோ வீச வேண்டாம் என்றும் பிரிதொரு பைகளில் சேகரித்து அதற்காக வருகின்ற பிரதேச சபையின் இயந்திரங்களில் போடுமாறும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறோம்.

‘டெங்கை கட்டுப்படுத்த முழு மூச்சுடன் செயற்படுவோம். – நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’

Related Post