Breaking
Sun. Dec 22nd, 2024

கொழும்பில் மீண்டும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது இன்று ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி வரை இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைபெறும் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

மேலும் இராணுவம்,பொலிஸ் ஆகியோரி;ன் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், ஏற்கனவே இவர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினால் டெங்குவின் தாக்கம் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் குறித்த நான்கு நாட்களுக்கு 450 குழுக்கள் மூலம் குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் சுகாதார பணிப்பாளர் குறி;ப்பிட்டுள்ளார்.

By

Related Post