டெங்கு காய்ச்சலால் இந்த வருடத்தில் மாத்திரம் 44 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகபடியாக (8248) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த இரு வாரத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 24,976 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்தார்.
கடந்த காலத்தில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் அடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக இடங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும், குறிப்பிட்டார்.