Breaking
Wed. Dec 25th, 2024

டெங்கு நுளம்புகள் அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் காய்ச்சல் குறித்து பொது மக்கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்­டு­மென சுகா­தார அமைச்சு எச்­ச­ரித்­துள்­ளது. சுகா­தார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரி­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது.

மழைக்கு பிந்­திய காலம் என்­பதால், டெங்கு நோய் தற்­போது வேக­மாக பரவ ஆரம்­பித்­துள்­ள­மை­யினால் பொது மக்கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும்.

குறிப்­பாக மேல் மாகா­ணத்தின் கொழும்பு மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் இந்த நோய் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது.

இத­னி­டையே குறித்த நோய் தொற்று கார­ண­மாக இது­வரை நாட­ளா­விய ரீதியில் 20 ஆயிரம் பேர் வரையில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு 50 பேர் வரையில் மர­ணித்­துள்­ளனர். இந்த நோய் பர­வாமல் தடுப்­ப­தற்கு தமது வீட்டுச் சூழலில் நீர் தேங்கி நிற்காத வண்ணம் சுத்தமாக பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

By

Related Post