உயர்தரப்பரீட்சைகள் நடைபெறும் அநேக மத்திய நிலையங்களில் டெங்கு நுளம்புகள் அதிகம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த பாடசாலைகளின் அதிபர்களும், கல்வி அமைச்சும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் டெங்குவின் தாக்கம் அதிகம் உள்ள மத்தியநிலையங்களுக்கு பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு முன்பு புகை விசிறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாடசாலைகளுக்கு புகை விசிறும் நடவடிக்கையானது பாடசாலைகள் 3ஆம் தவணைக்காக ஆரம்பிப்பதற்கு முதல் மேற்கொள்ளப்படும் எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வருடத்தின் கடந்த 7 மாதங்களில் 30,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் நாடுபூராகவும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் பிரசீலா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.