வாஷின்டன் நகரில் ‘CNN’ தொலைகாட்சி நேர்காணலில் கலந்துக் கொண்ட ஹிலாரி கிளின்டனிடம், ‘ஏர்ரம் தாரிக் முனீர்’ என்ற இஸ்லாமிய பெண்மணி, சமீப காலமாக அமெரிக்காவில் அதிகரித்துவரும் ‘இஸ்லாமோபோபியா’ குறித்து கேள்வி எழுப்பினார்.
தாரிக் முனீரின் வார்த்தைகளுக்கு ஒட்டுமொத்த அரங்கமே கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தது.
ஹிலாரியும், தன் பங்குக்கு கைதட்டி, இஸ்லாமிய பெண்ணுக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கொண்டதுடன், டொனால்ட் டிரம்ப்’பின் முஸ்லிம் விரோத போக்கு வெட்கக் கேடானது; அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்றார்.