அமெரிக்க ஜனாதிபதிக்கான வேட்பாளர் தெரிவின் முதற்கட்ட தெரிவில் டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்து டெட் குருஸ் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் அயோவா பகுதியில் நேற்று முன்தினம் வேட்பாளர் தெரிவின் முதற்கட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் குருஸ் 27.7 சதவீத வாக்குகளையும், டிரம்ப் 24.3 சதவீத வாக்குகளையும் பெற்றனர். அவர்களுக்கு அடுத்த நிலையில், மார்கோ ருபியோ 23.1 சதவீத வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
இதனால் டெட் குரூஸை குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என்று கருதப்படுகிறது. முன்னதாக முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைவது குறித்து ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததே அவருடைய இந்த தோல்விக்கு காரணம் என்று கருத்துகள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவுகளை வரவேற்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார். ஜனநாயக கட்சியை பொறுத்தவரை கிளாரி கிளிண்டனும், பெர்னி சண்டெர் சிறிய அளவு வித்தியாசமான வாக்குகளை பெற்றுள்ளனர்.
ஹிலாரி கிளிண்டன் 50.1 சதவீத வாக்குகளையும், பெர்னி 49.3 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி வேட்
பாளரை தெரிவு செய்ய இரு கட்சிகளிலும் விரைவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
முன்னதாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் டொனால்ட் ட்ரம்புக்கு சாதகமாக இருப்பதாகவும், அவருக்கு 34 சதவீதம் பேரின் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
டெட் குருசுக்கு 20 சதவீதம் பேரின் ஆதரவு கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.