அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு டொனால்ட் ட்ரம்ப் தகுதியற்றவர் அவரை, அனைவரும் நிராகரிக்க வேண்டுமென ஜனாதிபதி ஒபாமா கோரியுள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ஒபாமா, ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்.
அமெரிக்க ஜனாதிபதியாக யாரையும் ஆதரித்து இந்த கருத்தை நான் கூறவில்லை. ட்ரம்ப் எனது கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நான் இதே கருத்தை தான் கூறியிருப்பேன்.
ஜனாதிபதியாக இருந்து சேவையாற்றுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை என நான் கடந்த வாரம் கூறி யிருந்தேன். அதை ட்ரம்ப் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
நமது நாட்டுக்காக அவர் மிகப் பெரிய தியாகம் செய்து விட்டதை போல் பேசுகிறார். உண்மையில் எந்த தியாகத்தையும் அவர் செய்து விடவில்லை.
ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகளின் பிரச்சினைகள் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அதனாலேயே அவர் ஜனாதிபதியாவதற்கு பொருத்தமற்றவர் என கூறினேன் என தெரிவித்துள்ளார்.