Breaking
Sun. Mar 16th, 2025

தகவலறியும் உரிமை சம்பந்தமான ஆணைக்குழுக்கு உறுப்பினர்களை நியமித்து அதை ஆணைக்குழுவாக ஸ்தாபிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடிய அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தின் போது சுயாதீன ஆணைக்குழுக்களின் தற்போதைய நிலமைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பேசப்பட்டுள்ளது.

அத்துடன் தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பாக அரசியலமைப்பு பேரவை தீவிரமாக பேசப்பட்டுள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அரச நிர்வாக அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் சிறந்த உறவுகளை மேற்கொண்டு அந்த அமைப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களின் கருத்தாக இருந்துள்ளது.

By

Related Post