-ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம் –
தகவலறியும் ஆணைக்குழுக்கு இம்மாத இறுதிக்குள் உரிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டு ஆணைக்குழுவை நிறுவப்பட வேண்டுமென அரசியல் அமைப்பு பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் அரசியலமைப்பு பேரவை கூடியது. இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சபாநாயகர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது,
சுயாதீன ஆணைக்குழுக்களின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் தகவலறியும் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வியூகங்களை வகுப்பது குறித்து அரசியல் அமைப்பு பேரவைக் கூட்டத்தொடரில் ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அரச நிருவாக அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் சிறந்த தொடர்புககளை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்து அரசியலமைப்பு பேரவையின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.
தகலறியும் சட்டத்தை முழுமையகவும் செயற்திறன் மிக்க வகையிலும் நடைமுறைப்படுத்துவதற்காக தகவலறியும் ஆணைக்குழு நிறுப்படுவதோடு அதற்குரிய அங்கத்தவர்களும் உரியவாறு நியமிக்கப்படவேண்டும் எனவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து இம்மாத இறுதிக்குள் அச்செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.