தகவல் அறியும் உரிமை சட்டப்படி கணவனின் ஊதியத்தை மனைவி அறியலாம் என்று, தகவல் அறியும் உரிமை ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
தனி நபர் ஒருவரின் ஊதியத்தை அறியும் உரிமை யாருக்கும் இல்லை என்று சட்டத்தில் இருக்கும் பட்சத்தில், கணவனின் ஊதியம் குறித்து அறிந்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பெண்மணி தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தகவல் அறியும் உரிமை ஆணையம், இனி கணவனின் ஊதியத்தை அறிந்துக்கொள்ளும் உரிமை மனைவிக்கு உள்ளது என்றும், மனைவியின் ஊதியத்தை அறிந்துக்கொள்ளும் உரிமை கணவனுக்கு உள்ளது என்றும் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவுக்கு சில பெண்கள் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.