Breaking
Mon. Dec 23rd, 2024

தகவல் அறியும் உரிமைக்கான சட்ட மூலத்தின் ஐந்து வசனங்கள் அரசியலமைப்பை மீறுவதாக காணப்படுவதால் அதனை திருத்தங்களின்றி நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைக்கான சட்ட மூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை தொடர்பான மனுக்கள் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ள தீர்மானத்திலேயே உயர் நீதிமன்றம் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளது. நேற்று(03) செவ்வாய்கிழமை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவித்தல் நேரத்தில் தகவல் அறியும் உரிமைக்கான சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்மானத்தை சபைக்கு அறிவித்தார்.

அவருடைய அறிவிப்பில் மேலும் தெரிவித்ததாவது, அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபினைக்கு உட்படுத்தப்பட்ட தகவலறியும் உரிமைச் சட்ட மூலம் தொடர்பான தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன, தகவலறியும் சட்ட மூலத்தின் வாசகம் 5 (1) (ஏ) அரசியலமைப்பின் 3, 4, 12 (1) மற்றும் 14 (அ) (21) உறுப்புரைகளையும் வாசகம் 9 (2) (அ) அரசியலமைப்பின் 3, 4, 12 (1) மற்றும் 14 ஆம் உறுப்புரைகளையும் வாசகங்கள் 43 (ஒ) மற்றும் 43(ஓ) ஆகியன அரசியலமைப்பின் 3, 4 மற்றும் 14 (அ) ஆம் உறுப்புரைகளையும் மீறுவதாக அமைவதனால் சட்டமூலம் அதன் தற்போதைய அமைப்பில் அரசியலமைப்பின் 84 (2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைவாக விசேட பெரும்பான்மை வாக்குகளால் மட்டுமே நிறைவேற்றப்படலாமென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனினும் உயர் நீதி மன்றத்தின் பணிப்புக்கு அமைவாக மேற்படி வாசகங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் மேற்குறிப்பிட்ட முரண்பாடுகள் அனைத்தும் நீக்குவதாலும் இச் சட்டமூலம் சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படலாம் எனவும் மன்று மேலும் தீர்ப்பளித்துள்ளது.

By

Related Post