Breaking
Sun. Dec 22nd, 2024

பொலன்னறுவை – மட்டக்களப்பு பகுதியில் புகையிரத வீதி மஹேவேவ பகுதியில் யானை ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த யானையில் காது மற்றும் வாளை சந்தேக நபர் ஒருவர் வெட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை துரிதமாக தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதனடிப்படையில் கடந்த 27ஆம் திகதி குறித்த யானை விபத்துக்குள்ளான நிலையிலேயே இவ்வாறு யானையில் உடற்பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ள வனவிலங்கு திணைக்களம் சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கினால் ஒரு லட்ச ரூபாய் சன்மானமாக வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சந்தேக நபர் தொடர்பிலான விபரங்களை கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்கலாம்.

SAWC -SL 071-9005549

NWCPU – 0703303022

LET THEM LIFE – 0713994019

By

Related Post