Breaking
Tue. Dec 24th, 2024

மாஞ்சோலை தச்சுத் தொழிலாளர்களின் தொழிற்சாலை திறப்பு விழா கடந்த 01.02.2019 தலைவர் ஹமீட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் அஸ்மி , உறுப்பினர்களான நெளபர், அமீர், ஜெளபர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் றுவைத் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஹமீட், வட்டாரக் குழு தலைவர் அப்துல் சலாம் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தொழிற்சாலையை மேம்படுத்தும் நோக்கில் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் 3 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 

Related Post