Breaking
Wed. Jan 15th, 2025

– அஸ்ரப் ஏ சமத் –

தடாகம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கவிதைத் தொகுதி  மற்றும் குறுந்திரைப்படம் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் சனிக்கிழமை (21) நவம்பா் 2015 காலை 10.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீனும் கௌரவ அதிதியாக  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மானும் கலந்து கொள்வாா்கள்.
முதல் பிரதி பெறுபவர்  கவிஞா் ஜங்கரன் கதிா்காமநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது .

புத்தளம்  கவித்தீபம் நுஸ்றி ரஹ்மத்துல்லாஹ் எழுதிய  ”கடல் தேடும் நதி” கவிதைத்தொகுதி ”பேசமறந்த வாா்த்தை குறுந்திரைப்படம் இந் நிகழ்வில் வெளியீட்டு வைக்கப்படும்.  தடாகத்தின்  பின்வருவோா் கௌரவிக்கப்பட உள்ளனா். கலாநிதி துறை மனோகரன், மக்கியா முசம்மில்,  வவுனியா செந்துரான், பாரவசு பதியத்தலாவ பாருக்  ஓய்வு பெற்ற தொழில்நுட்பக் கல்லுாாி  அதிபா் எம்.எச்.ஏ சமத், கவிஞா் ஜங்கரன் கதிா்காமநாதன், மௌலவி காத்தான்குடி பௌஸ், கவிஞா் த. ருபன்,  கவிஞா் இஸ்மாயில் றியாஸ், கவிதாயினி எஸ்.ஆர். கலா,  கவிதாயினி சுல்பிகா ஷரீப்,  கவிஞா் சுஜப் . எம். காசீம் ஆகியோா் கௌரவிக்கபப்ட உள்ளனா்.

By

Related Post