புலிகள்மீதான தடையை ஐரோப் பிய ஒன்றிய நாடுகள் நீக்கு மானால், இதைப் பயன்படுத்தி தம்மை பலப்படுத் திக் கொள்வதற்கான முயற்சியில் இவ்வமைப்பு இறங்கக்கூடும் என்றும், எனவே, இது குறித்து பாதுகாப்பு அமைச்சு விழிப்புடனேயே இருக்கின் றது எனவும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாள ரும் இராணுவப் பேச்சாளருமான பிரி கேடியர் ருவான் வணிகசூரிய நேற்று தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபி விருத்தி அமைச்சில் நேற்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட் டில் கேள்வி நேரத்தின்போது, ஐரோப் பிய நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய அங்கு புலித்தடை நீக்கப்படுமானால் அது இலங்கையின் தேசியப் பாதுகாப்பில் எத்தகைய
தாக்கத்தை ஏற்படுத்தும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக் கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புலிகளின் ஆயுதபலம் இலங்கை யில் அழிக்கப்பட்டாலும், பிரிவினை வாதத் கொள்ளையுடையவர்கள் இலங் கையிலும் அதற்கு வெளியிலும் இருக் கத்தான் செய்கின்றனர். எனவே, நாம் மிகவும் உன்னிப்பாக விடயங்களை அவதானிக்க வேண்டியுள்ளது என் றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புலித்தடை நீக்கத்துக்கு எதிராக வெளிவிவகார அமைச்சு இராஜதந்திர மட்டத்திலான நடவடிக்கையில் இறங்கி யுள்ளது. இந்த தடை நீக்கத்தை பயன் படுத்தி நிதிதிரட்டல் உள்ளிட்ட நடவடிக் கையில் ஈடுபட்டு தம்மை பலப்படுத்திக் கொள்வதற்கு புலி செயற்பாட்டாளர்கள் முயற்சித்தால், அது இலங்கைக்கு ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற் படுத்தும். எனவே, இது குறித்து விழிப் பாகவே இருக்கின்றோம்.
இலங்கையில் அறநெறிவகுப்புகள் நடைபெறுவதுபோல், ஐரோப்பாவில் புலி செயற்பாட்டாளர்கள்,தமிழ் சோலை என்ற பெயரில் பாடசாலைகளை நடத்தி வருகின்றனர். அங்குச் செல்லும் சிறார் களுக்கு, ஆயுதம் தாங்கிய படங்கள் காண்பிக்கப்படுகின்றன. இவ்வாறு பல செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட் டுள்ளனர். எனவே, ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. மூன்றுமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இது குறித்தும் நாம் உன்னிப்பாக அவதா னித்துவருகின்றோம் என்றும் இரா ணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டார்.