ஞானசார தேரரை செப்ரம்பர் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவினை விடுத்தள்ளது.
மாலபே பிரதேசத்தில் கிருஸ்தவ தேவாலயமொன்றை தாக்கி சேதப்படுத்திய வழக்கு தொடர்பிலேயே இவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் உட்பட இன்னும் சில பிக்குகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கே ஞானசார தேரவுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவ் வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பொதுபலசேனா பிக்குகள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இத்தீர்ப்பை ரத்துச் செய்துவிட்டு, மீண்டும் வழக்கை விசாரணை செய்து இவர்களுக்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.
இவ்வழக்கு விசாரணைக்கே தற்போது ஞானசாரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது