தவறு செய்திருந்தால் தண்டனை அனுபவிக்கத் தயார் என்றும் மக்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பை தமது குடும்பத்தார் மீது காண்பிக்க வேண்டாம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
நேற்று காலை கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்னும் சில நாட்களில் என்னையும் அழைப்பர். நாமலையும் அழைப்பர். பஸில், மற்றும் கோத்தபாய ஆகியோரையும் அழைப்பர். நல்லாட்சியை சரியாக முன்னெடுக்க வேண்டுமல்லவா? இதன் காரணமாகவே ஏனைய விடயங்களுக்கு அவர்களுக்கு நேரம் இல்லாமல் போயுள்ளது.
மக்கள் எதிர்ப்பு அதிகரிக்கும் போது என்மீதே குரோதம் கொள்கின்றனர். அதற்கு நான் என்ன செய்ய? மக்கள் எதிர்ப்பை தவிர்க்க அவர்கள் செயற்பட வேண்டும். இது யோஷித்த மீதுள்ள குரோதம் அல்ல. இவை அனைத்தும் அரசியல் அல்லவா? அந்த குரோதத்தை பிள்ளைகளிடம் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கின்றனர். நான் தவறு செய்திருந்தால் அதற்காக தண்டனை அனுபவிக்க தயாராகவுள்ளேன்.