பழைய தவறுகளுக்கு தண்டனை விதித்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் 30 ஆண்டுகள் போர் இடம்பெற்றது.
போர் இடம்பெறும் போது அனைத்து விடயங்களும் சட்ட ரீதியாக நடைபெறாது.
இராணுவத்திற்கோ, ஆட்சியாளர்களுக்கோ அல்லது போர் செய்தவர்களுக்கோ தண்டனை விதிப்பதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
சிங்களம் தமிழ் என்று பேதமில்லை. அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
மீளவும் இதயங்களை குரோதம் ஏற்படாத வகையில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பக் கூடிய சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமென திஸ்ஸ அத்தநாயக்க சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.