கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார,
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பாக, பாராளுமன்றத்தில் விரைவான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக இதுவரையில் தெளிவு படுத்தப்படவில்லை என்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சி சார்ப்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்தும் இவ்வளவு அவசரமாக சட்டம் நிறைவேற்றப்பட்டதன் காரணம் என்னவென அவர் கேள்வியெழுப்பினார்.
இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த குறித்த சட்ட மூலமானது முன்கூட்டியே விவாதித்துள்ளதுடன் சட்ட மூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கான அவசியத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
வற்வரி தகவல் அறியும் சட்ட மூலம் காணாமல் போனோர் தொடர்பாக கண்டறியும் ஆணைகுழு போன்ற சட்ட மூலங்களை அமுல்படுத்தியதன் மூலம் அரசாங்கம் இறுகிப்போய் உள்ளதாக வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு முழுக்காரணம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரே அதை மைத்திரிபால சிறிசேனவிற்கு விட்டுகொடுக்கமுடியாது.
இதை எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிட்டு நிரூபிக்க முடியும் எனவும் அவர் சவால் விடுத்தார். tm