Breaking
Tue. Nov 19th, 2024

நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலையங்களை ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவரும் நோக்குடனான சந்திப்பொன்று அண்மையில், நிந்தவூர் பிரதேச சபையில், தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, தனியார் மற்றும் பிரத்தியேக கல்வி நிறுவனங்களில் காணப்பட வேண்டிய சுற்றுச்சூழல், பெளதீக கட்டமைப்பு, நேர அட்டவணை மற்றும் மாணவ மாணவிகளின் ஒழுக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக, விரிவாக கலந்தாலோசனை செய்யப்பட்டன.

இதன்போது, ஏற்கனவே பிரதேச சபையால் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுற்றுநிருபத்தின்படி, சுமார் 90 வீதமான விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், 10 வீதமான விடயங்களை செயற்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, அவை தொடர்பாகவும் அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகளைக் கண்டறிந்து, பரிந்துரை செய்வதற்காக, ஐந்து பேர் கொண்ட குழுவொன்றும் தவிசாளரினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில், நிந்தவூர் ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், கல்வி அதிகாரிகள், நிந்தவூர் சீ ஓ லெஸ்தகீர் சர்வதேச பாடசாலையின் அதிபர், பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர், தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post