Breaking
Wed. Nov 20th, 2024

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இப்பிராத்தியத்தில் உருவாக்கப்பட்டதன் காரணமாக கல்வியின் அடிப்படையில் இப்பிராந்தியம் எவ்வாறு கல்வியில் உயர்வுற்றதோ அதேபோன்று தனியார் பல்கலைக்கழகம் ஒன்றையும் நிறுவி இன்னும் கல்வியாளர்களை உருவாக்கி பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதே தங்களது இலக்கு என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தககூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியூதீனனுடைய பூரண அனுசரணையுடன் கலாநிதி ஏ.எம்.ஜெமீலினால் நடைமுறைப்படுத்தப்படும் 1000 மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக ஒலுவில் பிரதேசத்தில் தேவையுடைய 125 பேருக்கு கண்ணாடிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு 2017-07-29 ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒலுவில் முக்கியஸ்தர் ஏ.எல்.ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே கலாநிதி ஜெமீல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு பிரதேசத்தின் வளர்ச்சி என்பது கல்வியைக்கொண்டே அளவிடப்படுகின்றாது அந்த அடிப்படையில் இந்த பிரதேசத்தில் கற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மறைந்த தலைவருக்கு பக்கபலமாக இருந்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினோம். இது தற்போது நன்கு வியாபித்து பல அறிஞர்களையும் கலாநிதிகளையும் உருவாக்கியுள்ளது. பாரிய கல்விநிறுவனம் ஒன்று உருவாவதற்கு எனது பங்களிப்பும் இருந்தது என்பதில் நான் மிகுந்த உள்ளசாந்தியடைகின்றேன். இப்பிராந்தியத்தை கல்வியின் அடிப்படியில் முன்னேற்றும் எனது வேலைத்திட்டத்தினை இன்னும் விஸ்தரித்துக் கொண்டே வருகின்றேன். அடுத்த கட்டமாக தேசியத் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியூதீனனுடைய பூரண அனுசரணையுடன் நமது பிரதேசத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றையும் நிறுவி அதனூடாக இன்னும் பல கல்வியாளர்களை உருவாக்குவதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

எனயோர்களைப்போல் அல்லாது தேர்தல் காலத்துக்கு அப்பாலும் மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கொள்கையின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியூதீனனுடைய பூரண அனுசரணையுடன் மூக்குக்கண்ணாடிகள் வழங்குதல் போன்ற நிகழ்வுகளையும் நடாத்தி வருகின்றோம். இந்த மூக்குக்கண்ணாடியானது ஏனையவர்கள் வழங்குவது போன்றல்லாது உரியமுறையில் கண்கள் பரிசோதிக்கப்பட்டு நீண்டகாலத்துக்குப் பாவிக்கக்கூடியவாறு தரமான கண்ணாடிகளை வழங்கிவருகின்றோம்.

இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவேண்டும் என்ற மேலான எண்ணத்தின் காரணமாகவே தான் அரசியலில் குதித்ததாகவும் சிலரைப்போன்று மக்களை ஏமாற்றி அவர்களது அபிலாஷைகளுக்கு எதிராக செயற்பட்டு வயிறு வளர்ப்பவன் தான் இல்லை என்றும் இந்தமக்களின் தேவைகளை நீரைவேற்ற தன்னாலான அனைத்தையும் செய்வேன் என்றும் தெரிவித்தார்.

என்னால் உங்களுக்கு சேவையாற்ற முடியும் என்ற காரணத்தினாலேயே இரண்டுமுறை மாகாணசபைக்கு தெரிவுசெய்து என்னால் முடிந்ததை உங்களுக்குச் செய்வதற்கு வளிககுத்தீர்கள் நானும் அவ்வாறே செய்து வருகின்றேன். இப்பிராந்தியத்தில் இன்னும் சிறப்பான பணிகளை ஆற்றுவதற்காக தலைவர் அமைச்சர் றிஷாத் பதியூதீன் எனக்கு அனுசரணையையும் ஆலோசனையையும் வழங்கிவருகிறார் அவர் இப்பிராந்திய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மிகுந்த அக்கறையுடன் செயட்பட்டுவருகிறார். மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்குப் பின்னர் நமது சமூகத்தை வழிநடத்தக்கூடிய தகுதியான தலைவர் என்றால் அது றிஷாத் பதியூதீன் தான் என்றும் தெரிவித்தார்.

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களது வழிநடத்தலின்கீழ் கீழ் பல்வேறு மக்கள்நல பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு வரும் எங்களைத் தவிர்த்து வெறும் நான்காயிரம் வாக்குகளை மட்டுமே பெற்ற தற்போதைய கிழக்கின் முதல்வருக்கு பணத்தைப்பெற்றுக்கொண்டு முதல்வர் பதவியை வழங்கியதாலும் முஸ்லிம் சமூகத்தின்மீது தங்களுக்குள்ள கடமையை முஸ்லிம் காங்கரஸ் நிறைவேற்றத்தவறியதன் காரனத்தினாலுமே அந்த அமைப்பில் இருந்து விலகியதாகவும் மக்கள் நலனுக்கு தன்னை முழுக்க அர்ப்பணித்துள்ள உண்மையான தலைவர் றிஷாத் பதியூதீனுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

Related Post