Breaking
Mon. Dec 23rd, 2024

பரீட்சை எழுதும்  மாணவர்களின் நன்மை கருதி தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின்  தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான  அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை  பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பு  நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர்  மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்  இவ்வாறு  தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடும்போது போக்குவரத்து பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்களுக்கான புகைப்பரிசோதனை கட்டணம், அனுமதிப்பத்திர கட்டண அதிகரிப்பு  ஆகியவற்றுக்கு அரசாங்கம்  முறையான  தீர்வொன்றை பெற்றுத்தராவிட்டால் எதிர்வரும் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில்  பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட  போவதாக தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின்  தலைவர்  குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் க.பொ.த. (சா.த) பரீட்சை  நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலம் எதிர்வரும்  15 ஆம் திகதி கணிதப் பாடம் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் 15 ஆம் திகதி  பணிப் பகிஷ்கரிப்பு  இடம்பெறுமானால் பரீட்சை  எழுதும் மாணவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் குறித்த  தினம் உரிய நேரத்துக்கு பரீட்சை  மண்டபத்துக்கு  போய் சேர முடியாமல் போகுமே என்ற மன அழுத்தத்துக்கு  மாணவர்கள் இப்போதே  ஆளாகியுள்ளனர். பஸ் உரிமையாளர்களுக்கு பிரச்சினைகள் இருக்கலாம். அதனை  அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் தீர்மானத்துக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் வேறு நாட்களில் போராட்டங்களில் ஈடுபடலாம். ஆனால் மாணவர்களின் வாழ்க்கையை பணயம் வைத்து  தங்களது தேவைகளை  அடைந்துகொள்ள  முயற்சிக்கக் கூடாது.

மேலும் தற்போது  நாட்டின் சில பகுதிகளில் பாதை ஒழுங்கு  சட்டம் கடுமையாக பொலிஸாரால்  கடைபிடிக்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்கதாகும். ஏன் என்றால் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கென்று  பாதை திசை ஒன்று இருக்கின்றது. திசை மாறிச் செல்வதனால் தான் கூடுதலான  வாகன நெறிசல்கள்  ஏற்படுகின்றன. அத்துடன் தனியாருக்கு சொந்தமான பஸ்களும் இ.போ.ச.பஸ்களும் போட்டியிட்டுக் கொண்டு செல்வதனாலும் வாகன நெறிசல்கள் ஏற்படுகின்றனர்.

அதேபோன்று நாட்டில்  நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் எவ்வாறு  வாகனம் செலுத்த வேண்டும் என்ற  தெளிவு  அநேகமானவர்களுக்கு  இல்லாமல் இருக்கின்றது. எனவே இது தொடர்பில் வாகன சாரதிகளுக்கு தெளிவூட்டப்படவேண்டும்.

அத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின்  கொள்கையையே கடைப்பிடிக்கின்றது. வடமாகாண சபை தேர்தல் தொடர்ந்து நடைபெற்றால் அதனூடாக ஈழத்தை  உருவாக்குவார்கள் மற்றும்  சரத்பொன்சேகா நாட்டில்  பாரிய சூழ்ச்சி ஒன்றை  ஏற்படுத்த திட்டமிட்டிருந்தார் என  தனது உளவுப்பிரிவினர் தெரிவித்ததாக வெங்கமுவே நாலக்க தேரர் ஊடகங்களுக்கு முன் வந்து  குறிப்பி81 WordPress Update, 3 Plugin Updates, 4 Theme Updatesடுகின்றார். தேரரிடம் உளவுப் பிரிவு  இருக்குமென்றிருந்தால் அதற்கு கிடைக்கும் தகவல்களை  ஊடகங்களுக்கு தெரிவிக்காமல் அரசாங்கத்திடம்  தெரிவித்தால் நாட்டில் ஈழம்  உருவாகுவதையே சூழ்ச்சிகள் இடம்பெறுவதையோ தடுக்க முடியும்.

நாட்டில்  தற்போது சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழக் கூடிய ஓர் நிலைவரம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதனை தடுத்து மீண்டும் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தி நாட்டில்  அமைதியின்மையை ஏற்படுத்த தேரர்கள் முயற்சிக்கக் கூடாது என்றார்.

By

Related Post