Breaking
Mon. Jan 6th, 2025

சிறந்த கல்விமானும் எனது நண்பருமாகிய அஹமட் லெப்பையின் திடீர் மரணச் செய்தி கேள்வியுற்று மிகவும் கவலையடைந்துள்ளேன் என்று கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.

அக்கறைப்பற்றைச் சேர்ந்த கல்விமான் அஹமட் லெப்பையின் மரணச் செய்தி தொடர்பாக வெளியிட்டுள்ள மரணச் செய்தியிலே மேல் குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…

மரணம் அடைந்த எனது நண்பர் அஹமட் லெப்பை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த காலத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெறுவதற்கும் வலயத்தின் வளர்ச்சிக்காக மிகவும் பாடுபட்ட ஒருவர் என்பதுடன், மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மெருகூட்டும் வகையில் பெரும்பாடுபட்ட ஒருவராவார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் கடமையாற்றிய காலத்தில் தன் கடமைக்கு அப்பால் சமூக சிந்தனையுடன் நேரம் காலம் பாராது தனது சேவைகளை செய்து மட்டக்களப்பு மத்தி வலயத்தினை முன்னிலைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

சிறந்த ஆங்கிலப் புலமையுடைய இவர் மட்டக்களப்பு மத்தி வலயத்தில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் உழைத்த கல்விமானாவார்.

சிறந்த கல்விமான் என்ற பெருமைக்குரியவராக திகழ்ந்த எனது நண்பரின் மறைவு என்னை மிகவும் கவலையடையச் செய்துள்ளது. அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்துக் கொள்வதுடன், அவரது மறுமை வாழ்வுக்காக இறைவனை பிரார்தித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Related Post