Breaking
Sat. Dec 13th, 2025
நெதர்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக தபாலில் அனுப்பப்பட்ட போதை மாத்திரை ஒரு தொகை கொழும்பு மத்திய தபால் நிலையத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த தபால் பொதியானது கிரான்ட்பாஸ் பகுதி வர்த்தகர் ஒருவருக்கு நெதர்லாந்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் பெறுமதி 50 இலட்சம் என பிரதி சுங்க அதிகாரி லால் வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த பொதியினை தபால் நிலையத்திலிருந்து விடுவிக்க உதவிய தபால் நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதனுடன் தொடர்புடைய வர்த்தகரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By

Related Post