பொதுத் தேர்தலுக்கான தபால்மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்கட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அச்சிடப்பட்ட அனைத்து தபால் மூலம் வாக்காளர்களின் வாக்கட்டைகளும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் காமினி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய உத்தியோகபூர்வ வாக்கட்டைகள் அனைத்தும் விரைவாக அச்சிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை கிடைத்துள்ள விண்ணப்பங்களின் பிரகாரம் தபால் மூலம் வாக்களிப்போர் எண்ணிக்கை 25இ000 வரை அதிகரித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவிக்கின்றார்.
இதனிடையே, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிக்கும் நடவடிக்கை இரு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.