Breaking
Mon. Dec 23rd, 2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தபால் திணைக்களத்தின் பணிகள் பெரும்பாலும் சீர்குலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொட்டும் கடும் மழை காரணமாக அப்பகுதிகளில் விநியோகிக்க வேண்டிய தபால் பொதிகள் மற்றும் கடிதங்கள் தற்போது தபால் திணைக்களத்தின் தலைமையகத்தில் தேங்கத் தொடங்கியுள்ளன.

நேற்று மாலை வரை சுமார் ஐந்து லட்சம் கடிதங்களும் பொதிகளும் தேங்கியிருப்பதாக தபால் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் சாதாரண தபால் பொதிகள் மட்டுமன்றி பதிவுத் தபால் பொதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலநிலை சீரற்ற தன்மை காரணமாக தபால் புகையிரதங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமையும் தபால் விநியோகம் சீர்குலைவதற்கான ஒரு காரணமாக கூறப்படுகின்றது.

இதேவேளை, தற்போதைய நிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களுக்கான தபால் புகையிரதங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையினால் தபால் சேவை பாதிப்பு

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் தபால் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தபால் விநியோகம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக மத்திய தபால் பரிமாற்றின் பிரதான பிரதி தபால் மா அதிபர் ஜே.பீ.ஆர். விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தபால் நிலையங்களில் விநியோகம் செய்யப்படாத நிலையில் பெரும் எண்ணிக்கையிலான தபால்கள் மற்றும் பொதிகள் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் லொறிகள் உள்ளிட்ட வேறும் வழிகளில் தபால்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்கள் ஸ்தம்பிதம் அடைந்திருந்த தபால் சேவை தற்போது வழமை நிலைக்கு திரும்பி வருவதாகவும் விஜேரட்ன கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

By

Related Post