Breaking
Mon. Dec 23rd, 2024
கிருலப்பனையில் நடைபெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டமைக்காக, தமக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மகிந்த ஆதரவாளர்களால் நேற்றைய தினம் (1) கிருலப்பனையில் மேதினக் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மகிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில் தமக்கும், தமக்கு ஆதரவாக செயற்பட்ட சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post