Breaking
Wed. Nov 20th, 2024

முகம்மட் ரிபாக்

தமது கொள்கைகளை மக்களுக்கு திணிக்கும் அதிகாரிகளாக அரச உத்தியோகத்தர்கள் இருக்கக் கூடாது. மாறாக அரசின்,  கொள்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான ரிசாத் பதியுதீன், கடந்த ஐந்து வருடங்களில் முல்லைத்தீவு மாவட்டம் பாரிய அபிவிருத்தி அடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பணிபுரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு மானிய விலையில் மோட்டர் சைக்கில் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்;கிழமை இடம்பெற்ற போது அதற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என்.வேதனாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெளிக்களத்தில் பணிபுரியும் 287 ஆண் மற்றும் 50 பெண் உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கில்களை வழங்கி வைத்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

வெளிக்கள அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மோட்டார் சைக்கில்களை வழங்குவேன் என்று மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டிருந்தார்.
ஆண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தந்து அங்கு வைத்து வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிலை வழங்கினார்.

ஆதன் பின்னர் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்த்த வன்னிக்குப் பொறுப்பான அமைச்சரும், அபிவிருத்திக்குழுத் தலைவரும் என்ற அடிப்படையில் இன்று உங்களுக்கு மோட்டார் சைக்கில்கள் வழங்குவதனையிட்டு மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

எமது நாட்டில் கடந்த முப்பது வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால் எமது மாவட்டம் முற்றாக அழிந்து போனது. முக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் அடைந்தன. எனவே, முற்றாக அழிந்து போன முல்லைத்தீவு மாவட்டத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் முன்னேற்றும் நோக்கில் இன்று எமது மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஏனைய மாவட்டங்களைப் போல முல்லைத்தீவு மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஜனாதிபமி மஹிந்த ராஜபக்ஷவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, உள்ளிட்ட ஏனைய அமைச்சுக்களும் வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் என்ற வகையில் என்னுடைய வேண்டுகோளின் அடிப்படையில் இங்கு பல கோடி ரூபா செலவில் பாதை, மின்சாரம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சகல துறைகளிலும் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, படித்துவிட்டு தொழில் இன்றி இருக்கின்ற இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் அரச துறைகளில் தொழில்வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுத்திருக்கிறோம். இனிவரும் காலங்களிலும் பலருக்கு அரச துறையில் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எனவே, கடந்த ஐந்து வருடங்களாக எமது மாவட்டத்தில் பல கோடி ரூபாவில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளை அரச அதிகாரிகளாகிய நீங்கள் மக்களிடம் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது.
இவ்வாறான அபிவிருத்திகளையும், தொழில்வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுத்தவர்களுக்கும், அரசுக்கும் நாம் எப்போதும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். எமது மாவட்டத்தில் இன்னமும் அதிகமான தேவைகள் இருக்கின்றது.

ஆகவே, அந்த தேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அது ஒரு தனி மனிதனால் செய்ய முடியாது. ஏல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும் அப்போதுதான் எமது மாவட்டத்தை ஏனைய மாவட்டத்தையும் விடவும் கூடுதலான அபிவிருத்திகளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

Related Post