Breaking
Mon. Dec 23rd, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

கடந்த கால ஆட்சியில் இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்க வில்லை கடந்த ஆட்சியாளா்களது ஆட்சி மற்றும் சர்வதிகாரம், களவு, முறைகேடுகளை சரியான சத்தியமாக எழுதுவதற்கும் தமது பேனையை பாவிப்பதற்கும் முடியாமல் போகிவிட்டது. அவ்வாற ஊடகவியலளா்கள் தாக்கப்பட்டனா், லசந்த விக்கிரமரத்தின கொலை செய்யப்பட்டாா், ஊடகவியலாளா் எக்கிலியகொட கடத்தப்பட்டு காணாமல் போனாா். சில ஊடக தொழிற்சங்க உறுப்பிணா்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனா். இவற்றை செய்தவா்கள், இவற்றுக்கு கட்டளை வழங்கியவா்கள் எல்லாம் இந்த நாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும். என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச உரையாற்றினாா்.

திஸ்ஸமகாராமையில் லுனுகம்வெலயி்ல் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அமைச்சா் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு உரையாற்றினாா்.

தற்போதைய ஆட்சியில் இந்த அரசின் ஆட்சியை விமா்சிப்பதற்கும் எழுதுவதற்கும் ஊடகவியலாளா்களுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அதனை அவா்கள் சரியாக பாவித்து ஆட்சியாளா்கள் விடும் பிழையான முறைகேடுகளை மக்களுக்கு வெளிப்படுத்தல் வேண்டும். எதிா்வரும் ஆண்டின் ஜனவரியில் இந்த ஆட்சியின் சரியான ஆட்சி அமைச்சுக்களின் வரவு செலவுத்திட்டத்திற்குப் பிறகு அபிவிருத்திகள் மற்றும் அரசாங்கத்தின் அரசியல் நிர்ணயக்குழு தோ்தல், பொலிஸ், ஊடக ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகள் நடைபெறும்.

அத்துடன் ஜ.நா.வின் ஆணைக்குழு விசாரணை மற்றும் மனித உரிமை போன்ற பல்வேறு நிகழ்வுகளும் ஊடகவியளாாக்ளுக்கு சிறந்த செய்திகள் கிடைகக்பெறும். என அமைச்சா் சஜித் பிரேமதாச அங்கு உரையாற்றினாா்.

By

Related Post