பிரபல கூகிள் நிறுவனம் , இணையத்தில் தனக்கு இருக்கும் முதன்மை இடத்தை பயன்படுத்தி, இணையத்தில் விளம்பர தேடல்களில் துஷ்பிரயோகம் செய்வதாக இந்திய தொழில் போட்டிகளுக்கான ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.
‘தமது பொருட்களுக்கு தேடலில் கூகிள் முன்னிடம் தருகிறது’
கூகிள் நிறுவனத்தை 3 வருடங்களாக கண்காணித்துவந்த அந்த ஆணையத்தின் புலனாய்வாளர்கள், தனது தேடுதலுக்கான தளத்தில் விற்பனைச் சேவைகள் போன்ற தமது தயாரிப்புகளுக்கு இணையற்ற முக்கியத்துவத்தை வழங்குவதாக கூறியுள்ளனர்.
இதனால் மக்களுக்கு பெருமளவில் பொருத்தமான தகவல்கள் மறுக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமது புலனாய்வு தொடர்வதாகவும், இது தமது ஆரம்பக்கட்ட அறிக்கையே என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதே மாதிரியான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கூகிளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தம்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தாம் விடுபடுவோம் என்று கூகிள் கூறியுள்ளது.