Breaking
Sun. Mar 16th, 2025
இருவேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மூன்று பேர் நாளை (13) புதன்கிழமை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். மீனவர்கள் மூவரும் நாளை காலை 8.00 மணிக்கு இலங்கைக் கடற்படையினரின் பாதுகாப்பில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்தார்.
குறித்த மீனவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை மற்றும் கடற்படையினரின் படகுகளை சேதப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று மீனவர்களும் இரண்டு வழக்குகளிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மூன்று மீனவர்களும் இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், அவர்கள் தூதரகத்தின் பாதுகாப்பில் யாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நடராஜன் தெரிவித்தார்.

By

Related Post