Breaking
Mon. Dec 23rd, 2024

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையவில்லை எனில், இனி தேர்தலில் போட்டியிட மாட்டோம் என வைகோ தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

நடை பெறவுள்ள சட்ட மன்றத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணி சுமார் 150 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறோம்.

இது போன்ற நல்ல ஒரு கூட்டணி வாய்ப்பு மீண்டும் அமைவது மிகவும் கஷ்டம். எனவே, இந்த தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையாவிட்டால் தேர்தலில் இனி போட்டியிட மாட்டோம் என்று அதிர்ச்சி தகவலை வெளிட்டார்.

By

Related Post