Breaking
Mon. Dec 23rd, 2024

தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை எட்­டு­வ­தற்­கான நல்­ல­தொரு சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அதைப் பயன்­ப­டுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் கைகோர்க்க வேண்டும்.

அதேபோல் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஆத­ரவும் அவ­சி­ய­மா­னது என கோட்டே நாக­வி­கா­ரையின் விக­ரா­தி­ப­தியும் சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலை­வ­ரு­மான மாது­லு­வாவே சோபித தேரர் தெரி­வித்தார்.

வென்­றெ­டுத்த ஜன­நா­ய­கத்தை குழப்­பி­ய­டிக்க அதி­கார மோகம் கொண்ட ஒரு அணி தொடர்ந்து செயற்­பட்டு வரு­கின்­றது. அதற்கு இட­ம­ளிக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தேர்­தலின் பின்­னரும் பிர­தான கட்­சிகள் உறு­தி­யான ஆட்­சி­ய­மைப்­பதில் இழு­பறி நிலைமை ஏற்­பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் இந்த நாட்டில் ஏற்­பட்ட மாற்­ற­மா­னது நாட்­டுக்கு புதிய அர­சியல் கலா­சாரம் ஒன்றை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளது.

இந்த நாட்டில் இத்­தனை காலமும் தனித்து ஆட்சி அமைத்த பிர­தான இரு கட்­சி­களும் இந்தத் தேர்­த­லுடன் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்கம் எனும் ஆட்­சியின் கீழ் ஒன்­றி­ணைந்­தது. அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், மக்கள் விடு­தலை முன்­னணி ஆகிய முக்­கிய கட்­சி­களும் தேசிய அர­சாங்­கத்தில் கைகோர்த்து நாட்டில் தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்­களின் ஒன்­று­பட்ட செயற்­பா­டுகள் நாட்டில் மாற்றம் ஒன்­றினை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தது.

இந்த நிலையில் நடை­பெற்று முடிந்­துள்ள பொதுத் தேர்­தலின் மூலமும் மீண்டும் தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைக்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. எந்­த­வொரு கட்­சியும் தனித்து ஆட்­சி­ய­மைக்க முடி­யாத நிலையில் பிர­தான இரு கட்­சி­களும் ஒரு அணியில் கைகோர்த்து ஆட்­சி­ய­மைக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் எதிர்­பார்ப்பும் தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தே­யாகும்.

அதேபோல் நாட்டில் கடந்த பத்து ஆண்­டு­களில் தேடிக்­கொண்­டி­ருந்த மக்­களின் ஜன­நா­யக உரி­மை­களும், சுயா­தீன செயற்­பா­டு­களும் இப்­போது கிடைக்­கப்­பட்­டுள்­ளன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் ஒன்­றி­ணைந்த ஆட்­சியால் இந்த ஜன­நா­யகம் வென்­றெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

ஆகவே வென்­றெ­டுத்த ஜன­நா­ய­கத்தை தக்­க­வைக்க வேண்­டு­மாயின், இந்த நாட்டில் தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் தமது உரி­மை­களை வென்­றெ­டுத்து சுதந்­தி­ர­மாக வாழ வேண்­டு­மாயின் மீண்டும் கட்சி பேத­மின்றி அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­ வேண்டும். வடக்கும், கிழக்கும் தெற்கும் ஒன்­றாக கை கோர்க்கும் ஆட்­சியை மீண்டும் அமைக்க வேண்டும்.

இந்த தேசிய அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி பிர­தான கட்­சி­யாக செயற்­பட்­டாலும் ஏனைய கட்­சி­களின் ஆத­ரவும் தேவைப்­ப­டு­கின்­றது. அதேபோல் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் புரிந்­து­ணர்வு அர­சி­ய­லுக்கு தயா­ரா­கவே உள்­ளது. ஆயினும் நாட்டின் நல்­லாட்­சியை குழப்பும் முயற்­சிகள் இன்னும் தொடர்ந்­து­கொண்டே உள்­ளது.

அதி­கார மோகம் கொண்ட ஒரு கூட்­டணி நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த வண்­ண­மே­யுள்­ளது. ஆகவே இப்போது சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­க­ளுக்கு நல்­ல­தொரு சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அதேபோல் இவ்­வா­றான ஒரு சந்­தர்ப்­பத்தில் தமிழ், முஸ்லிம் மக்­களின் பிர­தி­நி­தித்­துவ கட்­சிகள் அர­சாங்­கத்­துடன் கைகோர்ப்­பதன் மூலம் தமிழ்பேசும் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை வென்­றெ­டுக்க முடியும்.

அதற்­கான நல்­ல­தொரு சந்­தர்ப்பம் இது­வாகும். அதேபோல் நாட்டின் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்த வேண்­டிய தேவை உள்­ளது. ஆகவே இவை அனைத்­தையும் கவ­னத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் கைகோர்க்க வேண்டும்.

மீண்டும் நாட்டில் தமிழ், சிங்கள ஒற்றுமையைக் கட்டியெழுப்பி நாட்டை அமைதியின் பாதையில் முன் கொண்டுசெல்ல வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்டார்.

Related Post