Breaking
Mon. Dec 23rd, 2024

– இர்ஷாத் றஹ்மத்துல்லா –

 சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் பேசி வந்துள்ளார்.

கடந்த அரசாங்கத்திலும்,முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடத்தில் இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பல முறை பேசி யுள்ளார்.

புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடத்திலும் இந்த கைதிகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்படுவதுடன்,சந்தேகத்தின் பேரில் குற்றங்கள் பதியப்படாதவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வந்துள்ளார்.

வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் கழிந்த கடந்த மாதத்தின் இறுதியில் கொழும்பில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் வேண்டுகோள்விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தமிழ் மக்கள் முன்னெடுக்கும் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு தமது தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

By

Related Post