Breaking
Mon. Dec 23rd, 2024
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நாளை நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த முயற்சியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இந்தியாவை திருப்தி படுத்தும் நோக்கில் அரசாங்கம் தமிழில் தேசிய கீதம் பாட முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய கீதம் ஒரு மொழியில் பாடப்பட வேண்டுமெனவும் இரண்டு மூன்று மொழிகளில் பாடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல மொழிகள் காணப்பட்ட போதிலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதாக தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்குமாறு தமக்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post