அண்மையில் நடாத்தப்பட்ட அதிபர் சேவை தரம் iii க்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் சித்தியடைந்த அனைத்து தமிழ் மொழி மூல தகுதியுடையவர்களுக்கு அதிபர் நியமனங்களை வழங்குமாறு துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சரிடத்தில் இன்று (25) விடுத்துள்ள கோரிக்கை அடங்கிய மஹஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. அதிபர் சேவை ஆட்சேர்ப்பு பிரமாணக்குறிப்பு மூலமாக உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தெரிவான 160 தமிழ் மூலமான அதிபர் நியமனங்களையும் வழங்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதனால் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் உள்ள அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்.
கல்வி அமைச்சின் மூலமாக வெளியிடப்பட்ட தமிழ் மொழி மூல அதிபர் நியமனப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய எந்தவித அடிப்படை உரிமைகளும் மீறப்படாத வகையில் நியமனங்களை வழங்குமாறு அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Attachments area