Breaking
Wed. Jan 8th, 2025

WAMY நிறுவனத்தின் Global Construction நிறுவன உதவியுடன் குளியாப்பிடிய பிரதேச சபைக்குட்பட்ட தம்பிடிய, கெகுணகொல்ல கிராமத்துக்கு குழாய் கிணறு மூலம் குடிநீர் திட்டம், நேற்று முன்தினம் (09) Global Construction நிறுவன முக்கியஸ்தர்களுடன் இணைந்து, முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளருமான எம்.என்.நஸீர் திறந்து வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறுவதுடன், எதிர்காலத்தில் ஒவ்வொரு வீடுகளுக்குமான நீர் வழங்கள் திட்டத்தை பல்வேறு நிறுவனங்களின் உதவிகளுடன் செய்துதர எதிர்பார்ப்பதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நஸீர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் எம்.ஐ.எம். ஸபீர், தம்பிடிய மிஸ்பாஹியா அரபுக் கல்லூரி அதிபர், தம்பிடிய ஜூம்ஆ பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Post