Breaking
Sat. Jan 11th, 2025

FI“சின்னபுள்ள….நீ தம்பிய கூட்டிக்கிட்டு ஓடு…நானும், அப்பாவும் பைல்கள எடுத்துக்கிட்டுவாரோம்” எனக்கூறி எங்கள அனுப்பிவிட்டு, அவங்க ரெண்டுபேரும் வீட்டுக்கு போ னாங்க. கொஞ்சத்தூரம் போயிட்டு, நான் திரும்பி பார்த்தேன். அப்போ, அம்மா, அப்பா ரெண்டு பேரையும் மண் மூடிருச்சி…”

இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவி த்தாள் 14 வயதுடைய கஜினி எனும் சிறுமி.
” சின்னபுள்ள….நீ தம்பிய கூட்டிக்கிட்டு ஓடு…நானும், அப்பாவும் பைல்கள எடுத்துக்கிட்டுவாரோம்” எனக்கூறி எங்கள அனுப்பிவிட்டு, அவங்க ரெண்டுபேரும் வீட்டுக்கு போ னாங்க. கொஞ்சதூரம் போயிட்டு, நா திரும்பி பார்த்தேன். அப்போ, அம்மா, அப்பா ரெண்டு பேரையும் மண் மூடிருச்சி…”

இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவித்தார் 14 வயதுடைய கஜினி எனும் சிறுமி.

“அப்பா ரவிச்சந்திரன்(வயது33), அம்மா ராஜகுமாரி(வயது33), தம்பி சுரேஷ்குமார்(வயது12) எனது சிறிய குடும்பத்தில் நான்தான் (கஜினி-வயது14) மூத்தவள். அன்று புதன்கிழமை காலை எதோ பெரிய சத்தம் கேட்டது. அப்போ ஏதோ மண்மேடு சரிந்து வர்ரதா சொன்னாங்க, இதனால என்னை எனது தம்பியை அழைத்துகொண்டு செல்லும்படி கூறிவிட்டு அம்மாவும் அப்பாவும் பைல்களை எடுத்திட்டு வர்தா சொல்லிட்டு கொஞ்ச தூரம் போனாங்க. அவங்க அப்படி போரப்போ நான் கொஞ்ச தூரம் சென்று திரும்பி பார்த்தேன்.. அப்போ அம்மாவையும் அப்பாவையும் மண் மூடி என் கண்முன்னே காணம போய்ட்டாங்க… அவங்க திரும்பி வரமாட்டாங்க… நாங்க இப்போ தாத்தா பாட்டியோடதான் இருக்கோம்..” என தனது பிஞ்சு வதனம் கண்ணீரால் நனைய தலையில் வைத்தப்படி தனது சோகத்தை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.(OS)

Related Post