Breaking
Mon. Dec 23rd, 2024

தம்புள்ளை பள்ளிவாயலுக்கு எதிராக எதிர்வரும் 19ம் திகதி ஆர்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அப்பள்ளிவாயளுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தம்புள்ளை பள்ளிவாயல் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த 14.11.2016 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்றது.

இதன்போது, குறித்த பள்ளிவாயலை தற்போது அமைந்திருக்கும் இடத்தில் இருந்து நூறு மீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு இடத்துக்கு கொண்டு செல்ல தாங்கள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளபோதும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதற்கு உரிய காணியை பெற்று தருவதில் தாமதம் காட்டுவதாக நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.

அவர்களின், பிணக்குகளை செவியுற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தம்புள்ளை பள்ளிவாயல் நிர்வாக குழுவுடன் நீண்ட நேரம் கலந்துரையாடிதுடன் தம்புள்ளை பிரதேச பெரும்பான்மை அரசியல்வாதிகள் மற்றும் அரச உயரதிகாரிகள் உள்ளிட்டோரை தொடர்புகொண்டு இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினார்.

14993384_1478914865458037_7865500649598640970_n

By

Related Post