-அஸீம் கிலாப்தீன் –
தம்புள்ளை நகரில் கடந்த புதன் அன்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினமும் நேற்றும் அங்கு உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று காலை தம்புள்ளை நகரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லீம் வர்த்தர்கள் முக்கியஸ்தர்களை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தற்போதைய பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இன நல்லிணக்க விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நேற்று இரவு பங்களாதேஷில் இருந்து நாடு திருப்பிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று காலை தம்புள்ளை நகருக்கு அண்மித்த பிரதேசம் ஒன்றில் தம்புள்ளை முஸ்லீம் வர்த்தர்களை சந்தித்து நிலமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு அமைச்சரின் மத்திய மாகாண அமைப்பாளர் இஸ்ஸதீன் ரியாஸின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.